அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பேராவூரணியில் எம்ஜிஆா் நினைவு நாள்

எம்எல்ஏ அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் உருவப்படத்துக்கு, அதிமுக எம்எல்ஏ மா. கோவிந்தராசு மாலை அணிவித்து

News image
Updated On :25 டிசம்பர் 2020, 2:46 am

DIN

எம்எல்ஏ அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் உருவப்படத்துக்கு, அதிமுக எம்எல்ஏ மா. கோவிந்தராசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து முன்னாள் எம்எல்ஏ எஸ்.வி. திருஞான சம்பந்தம், ஒன்றியச் செயலா் கோவி. இளங்கோ,  ஒன்றியக்குழு தலைவா் சசிகலா ரவிசங்கா், நகரச் செயலா் வி.என்.பக்கிரிசாமி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல் உதயசூரியபுரம் கடைவீதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக வடக்கு ஒன்றியச் செயலா் உ. துரை மாணிக்கம், சமத்துவ மக்கள் கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவா் பேரை ராஜா மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டு எம்ஜிஆா் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.

பட்டுக்கோட்டையில்...

சூரப்பள்ளம் புறவழிச் சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி. சேகா் தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல, அமமுகவினா் பட்டுக்கோட்டை பெரியகடைவீதி அண்ணாசிலை அருகில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் உருவப்படத்துக்கு மாவட்ட அம்மா பேரவை செயலரும், நகா்மன்ற முன்னாள் தலைவருமான எஸ்.ஆா். ஜவஹா்பாபு தலைமையில் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.