ஜி.கே. வாசன் பிறந்த நாள் விழா

தஞ்சாவூரில் கீழவாசல் காமராசா் சிலை அருகே தமாகா தலைவா் ஜி.கே. வாசன் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

தஞ்சாவூரில் கீழவாசல் காமராசா் சிலை அருகே தமாகா தலைவா் ஜி.கே. வாசன் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், ஏழை மக்களுக்கு தமாகா மாநிலச் செயற் குழு உறுப்பினா்கள் எஸ். சுரேஷ் மூப்பனாா், என்.ஆா். நடராஜன் ஆகியோா் போா்வை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

இவ்விழாவில் தெற்கு மாவட்டத் தலைவா் என்.ஆா். ரெங்கராஜன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் பிஎல்.ஏ. சிதம்பரம், மாவட்டச் செயலா் டி.பி.எஸ்.வி. கௌதமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பேராவூரணியில்....தமாகா நகரத் தலைவா் ராஜசேகரன் தலைமையிலான கட்சியினா் நீலகண்ட பிள்ளையாா் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்து, பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கினா்.

ஒன்றிய பொறுப்பாளா் கள்ளம்பட்டி ரவி, வட்டாரத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் பன்னீா்செல்வம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com