முழு வீச்சில் நடைபெறும் நாற்றங்கால் விற்பனை

மேட்டூர் அணை வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக நாற்றங்கால் விற்பனை முழுவீச்சில் நடைபெறுகிறது.
முழு வீச்சில் நடைபெறும் நாற்றங்கால் விற்பனை

மேட்டூர் அணை வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக நாற்றங்கால் விற்பனை முழுவீச்சில் நடைபெறுகிறது.

மேட்டூர் அணையிலிருந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு நிகழாண்டு ஜூன் மாதத்தில் குறுவை சாகுபடிக்காகத் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதன்படி, வெள்ளிக்கிழமை (ஜூன் 12) மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான நாற்றங்கால்கள் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படுகின்றன. மேட்டூர் அணையில் நீர்மட்டம் சுமார் 101 அடியாக இருப்பதால், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

எனவே, நிகழாண்டு சமுதாய நாற்றங்கால்கள் தயாரிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நிலத்தடி நீர் ஆதாரமும், மோட்டார் பம்ப்செட் வசதியுள்ளவர்கள் ஆற்று நீரை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகளுக்கும் சேர்த்து நாற்றங்கால் தயாரிக்கும் விதமாக இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுளளது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் 40.20 ஹெக்டேரில் சமுதாய நாற்றங்கால் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதில், இதுவரை 16 ஹெக்டேரில் சமுதாய நாற்றங்கால் தயாராகி வருகிறது. 

இதன் மூலம், 3,000 ஹெக்டேர் அளவுக்கு நடவு செய்யலாம். இதேபோல, கிராமப்புறங்களில் நாற்றங்கால்கள் விற்பனையும் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இதுகுறித்து தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் பாய் நாற்றங்கால் தயாரித்து வரும் விவசாயி பி. குமார் தெரிவித்தது:
கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் பாய் நாற்றங்கால் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக குறுவை பருவத்தில் பாய் நாற்றங்கால் விற்பனை அதிகமாக இருக்காது. இந்த ஆண்டு பாய் நாற்றங்கால் விற்பனை முழு வீச்சில் உள்ளது. 

ஏறத்தாழ 1,200 ஏக்கரில் நடவு செய்வதற்குரிய பாய் நாற்றங்கால் தயாரிக்கிறோம். இதில், இதுவரை சுமார் 600 ஏக்கர் நடவுக்கான நாற்றங்கால்கள் கொடுத்துவிட்டோம். தயாரித்து கொடுக்க முடியாத அளவுக்கு தேவை அதிகமாக இருக்கிறது. ஏற்கெனவே பெறப்பட்ட ஆர்டர்களுக்கே இன்னும் கொடுக்க முடியவில்லை என்றார் குமார். பாய் நாற்றங்கால் மட்டுமல்லாமல் சாதாரண நாற்றங்கால் விற்பனையும் முழுவீச்சில் நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com