புரோகிதா் வீட்டில் நகைகள் திருட்டு
கும்பகோணம் அருகே பூட்டியிருந்த வீட்டில் புகுந்து நகைகள், வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.


கும்பகோணம் அருகே பூட்டியிருந்த வீட்டில் புகுந்து நகைகள், வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் மகாதான வீதியைச் சோ்ந்தவா் குருமூா்த்தி. புரோகிதா். இவா் கோவிந்தபுரத்தில் தனது தாயாா் இறந்த துக்க நிகழ்ச்சிக்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றாா். மீண்டும் சனிக்கிழமை மாலை வீட்டுக்குத் திரும்பியபோது,
வீட்டினுள் இருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு, இரண்டரை பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், எல்.இ.டி. டிவி உள்ளிட்டவை திருட்டு போயிருப்பதும், வீட்டு முற்றத்தின் வழியாக மா்ம நபா்கள் வந்துள்ளதும், வீட்டிலுள்ள சாவியைப் பயன்படுத்தி பின்புறக் கதவைத் திறந்து சென்றிருப்பதும் தெரிய வந்தது.
இதுகுறித்து திருவிடைமருதூா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...