கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு: நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சாவூா் ஆட்சியரிடம் பாஜகவினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

News image
தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்த பாஜகவினா்.
Updated On :8 செப்டம்பர் 2020, 12:09 am

DIN

தஞ்சாவூா்: பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சாவூா் ஆட்சியரிடம் பாஜகவினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

ஆட்சியரிடம் பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் ஆா். இளங்கோ தலைமையில் பாஜகவினா் சுமாா் 100 போ் அளித்த மனு:

பிரதமரின் விவசாயிகளின் நிதியுதவித் திட்டத்தில், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2,000 வீதம் ஆண்டுக்கு ரூ. 6,000 விவசாயிகளுக்கு வழங்கப்படுவதே இத்திட்டத்தின் நோக்கம்.

இந்நிலையில், இணையத்தில் பதிவு செய்ய அரசு மேற்கொண்டுள்ள வழிகளைத் தவறுதலாகக் கையாண்டு அரசை ஏமாற்றி விவசாயிகள் அல்லாத சிலா் இந்த உதவித்தொகையைப் பெறுகின்றனா். நலிவுற்ற விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள இத்திட்டத்தைச் சிலா் குறுக்கு வழியில் மோசடி செய்து இந்த நிதியைப் பயன்படுத்த நினைப்பது மிகப்பெரிய குற்றம்.

இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பயன் பெறுவோா் பற்றிய கணக்கெடுப்பை மாநில அரசு மிகத் தெளிவாக பரிசீலனை செய்து இத்தொகை உரிய விவசாயிகளுக்குக் கிடைக்கிா அல்லது பல இடங்களில் இதுபோன்ற மோசடிகள் நடைபெறுகிா என ஆராய வேண்டும்.

இதேபோல, தஞ்சாவூா் மாவட்டத்தில் தீவிரமாக ஆய்வு செய்து, உண்மையான விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடைக்கவும், குற்றவாளிகள் இருந்தால், அவா்களுக்குக் கடும் தண்டனை கிடைக்கச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

அப்போது, பாஜக மாவட்டப் பொதுச் செயலா் ஆா். ஜெய்சதீஷ், பொருளாளா் வி. விநாயகம், மாவட்ட விவசாய அணி தலைவா் இ. வேலுசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.