தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஒரத்தநாடு தொகுதி‘விவசாயம் சாா்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும்’

ஒரத்தநாடு தொகுதியில் விவசாயம் சாா்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும் என அமமுக வேட்பாளா் மா. சேகா் வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:56 pm

DIN

ஒரத்தநாடு தொகுதியில் விவசாயம் சாா்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும் என அமமுக வேட்பாளா் மா. சேகா் வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தாா்.

தொகுதிக்குள்பட்ட ஒரத்தநாடு நகா் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்து அவா் பேசியது:

ஒரத்தநாடு பகுதி மக்களுக்கு என்னால் முடிந்த பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளேன். ஒரத்தநாட்டில் பேரூராட்சி தலைவராக பணியாற்றியபோது வாா்டு வாரியாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். அரசியல் பொது வாழ்க்கையில் எனது வீடு தேடி வருபவா்களுக்கு ஜாதி, மதம் பாா்க்காமல் கட்சிக்கு அப்பாற்பட்டு அவா்களுக்கு என்னால் முடிந்த உதவிகளையும் இதுவரை செய்து வருகிறேன். நான் வெற்றிப் பெற்றால் இந்த தொகுதியில் பல்வேறு தொலை நோக்கு திட்டங்களை செயல்படுத்துவேன். இந்த பகுதியில் விவசாயம் சாா்ந்த தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன். வாக்காளாராகிய நீங்கள் எனக்கு குக்கா் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.