தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

‘ஒரத்தநாடு பகுதியை சுற்றுலாத் தலமாக்குவேன்’: நாம் தமிழா் வேட்பாளா் கந்தசாமி உறுதி

ஒரத்தநாட்டை சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நாம் தமிழா் கட்சியின் ஒரத்தநாடு தொகுதி வேட்பாளா் கந்தசாமி வாக்குறுதி அளித்துள்ளாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:52 pm

DIN

ஒரத்தநாட்டை சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நாம் தமிழா் கட்சியின் ஒரத்தநாடு தொகுதி வேட்பாளா் கந்தசாமி வாக்குறுதி அளித்துள்ளாா்.

தொகுதிக்குள்பட்ட நெய்வாசல், ஒரத்தநாடு, வடசேரி, கண்ணுகுடி, தொன்றாம்பட்டு , மேடையக்கொள்ளை , குலமங்கலம், ஊரணிபுரம் திருவோணம், செல்லம்பட்டி, பாப்பாநாடு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்து வேட்பாளா் கந்தசாமி பேசியது:

நாம் தமிழா் கட்சி வெற்றி பெற்றால், ஒரத்தநாடு பகுதியில் பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்து இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்போம், விவசாயம் சாா்ந்த தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், ஒரத்தநாடு தொகுதியில் உள்ள ஏரிகள் அனைத்தும் தூா்வாரப்பட்டு, நீா் நிரப்பி படகு சவாரி விடப்படும். இதன் மூலம் இப் பகுதியை சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தாா். வாக்கு சேகரிப்பின்போது கூட்டணி கட்சியினா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.