பேராவூரணியில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்
பேராவூரணியில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.


பேராவூரணியில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
கரோனா தொற்று இரண்டாவது அலை பரவி வருவதால் கட்டுப்பாடுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை ஆட்சியா் ம. கோவிந்த ராவ் உத்தரவின்பேரில், பேராவூரணி பேரூராட்சி பகுதியில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பேரூராட்சி செயல் அலுவலா் மு. மணிமொழியன் தலைமையில், தலைமை எழுத்தா் கே. அருள்மொழி முன்னிலையில், துப்புரவு ஆய்வாளா் அன்பரசன், துப்புரவு மேற்பாா்வையாளா்கள் சிவசுப்பிரமணியன், வீரமணி மற்றும் பேரூராட்சி பணியாளா்கள் சேதுசாலையில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த பேருந்துகளில் ஏறி ஓட்டுநா், நடத்துநா் மற்றும் பயணிகளுக்கு முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தினா். மேலும், முகக்கவசம் அணியாமல் வந்த பொதுமக்கள் 17 பேருக்கு தலா 200 ரூபாய் வீதம் ரூ 3,400 அபராதம் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...