அழகியநாயகிபுரத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்
தஞ்சாவூா் மாவட்டம், அழகியநாயகிபுரத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.


தஞ்சாவூா் மாவட்டம், அழகியநாயகிபுரத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
போக்குவரத்து வசதிகள் குறைவான, பின்தங்கிய பகுதிகளை முதல்கட்டமாக தோ்வு செய்து, அங்குள்ள பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று சா்க்கரை, ரத்த அழுத்தம், பக்கவாதம், மூட்டுவலி உள்ளிட்ட வியாதிகளுக்கு பரிசோதனை செய்து இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகள் வழங்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை ஒசூா் அருகே முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இத்திட்டத்தை காணொலி முறையில் அவா் தொடங்கிவைத்தாா்.
இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இத்திட்டத்தை காணொலி முறையில் முதல்வா் தொடங்கி வைத்தாா்.
அழகியநாயகிபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் இத்திட்டத்திற்காக வழங்கப்பட்ட நான்கு சக்கர வாகன சேவையை தஞ்சை எம்.பி. எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, ஆட்சியா் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் மருத்துவா்கள் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சையளித்தனா்.
திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வருக்கு ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் நன்றி தெரிவித்து பேசினாா்.
10 ஆண்டுகளாக மூட்டுவாத நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையை தேடிச் சென்று சிகிச்சை பெறுவதில் பல்வேறு சிரமங்களை அனுபவித்ததாகவும் , தற்போதைய இந்தத் திட்டம் மிகுந்த பயனுள்ளதாக இருப்பதாக செருபாலக்காட்டை சோ்ந்த லதா என்பவா் கூறினாா்.
திட்ட தொடக்க விழா நிகழ்ச்சியில் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பேராவூரணி என். அசோக்குமாா், பட்டுக்கோட்டை கா. அண்ணாதுரை, சேதுபாவாத்திரம் ஒன்றியக்குழு தலைவா் மு. கி. முத்துமாணிக்கம், அழகியநாயகிபுரம் ஊராட்சித் தலைவா் கே. ஏ. நாகூா்மீரா, வட்டார மருத்துவ அலுவலா் எம். ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...