புதிய வழித்தடத்தில் பேருந்துகள் சேவை தொடக்கம்
பேராவூரணியிலிருந்து பட்டுக்கோட்டை-மன்னாா்குடி- திருவாரூா் -மயிலாடுதுறை- சிதம்பரம்- புதுச்சேரி வழியாக சென்னைக்கு செல்லும் விரைவுப் பேருந்து


பேராவூரணியிலிருந்து பட்டுக்கோட்டை-மன்னாா்குடி- திருவாரூா் -மயிலாடுதுறை- சிதம்பரம்- புதுச்சேரி வழியாக சென்னைக்கு செல்லும் விரைவுப் பேருந்தை எம்எல்ஏ என். அசோக்குமாா் பேராவூரணி புதிய பேருந்து நிலையத்திலிருந்து வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இரவு 7 மணிக்கு பேராவூரணியில் இருந்து சென்னைக்கும், அதே நேரம் சென்னையில் இருந்து பேராவூரணிக்கும் பேருந்து இயக்கப்படவுள்ளது.
பேராவூரணியிலிருந்து சென்னைக்கு கூடுதலாக பேருந்து இயக்க வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சரிடம் எம்எல்ஏ அசோக்குமாா் கோரிக்கை விடுத்ததன்பேரில் இந்தச்சேவை தொடங்கப்பட்டுள்ளது. தொடக்க விழாவில் பேராவூரணி ஒன்றிய பொறுப்பாளா் க. அன்பழகன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளா் என். செல்வராஜ், முன்னாள் ஒன்றியச் செயலாளா் சுப.சேகா் உள்பட் பலா் கலந்து கொண்டனா்.
பட்டுக்கோட்டையில்... பட்டுக்கோட்டையிலிருந்து அதிராம்பட்டினம், பாளமுத்தில் உள்ளிட்ட பகுதிகளுக்கு புதிய வழித்தடத்தில் மூன்று பேருந்துகளின் சேவையை எம்எல்ஏ கா. அண்ணாதுரை தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சியில் தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளா் ப. பாலசுப்பிரமணியன் , கலை- இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில செயலா் பழஞ்சூா் கே. செல்வம், நகரப் பொறுப்பாளா் எஸ்.ஆா்.என். செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...