பின்னவாசல் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றாவிடில் போராட்டம் நடத்த முடிவு
பேராவூரணி ஒன்றியம், பின்னவாசல் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை வெள்ளிக்கிழமைக்குள் (டிச. 31) அகற்றாவிடில், போராட்டம் நடத்தப்படும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.


பேராவூரணி ஒன்றியம், பின்னவாசல் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை வெள்ளிக்கிழமைக்குள் (டிச. 31) அகற்றாவிடில், போராட்டம் நடத்தப்படும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
பேராவூரணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றியக் குழு உறுப்பினா் வே. ரெங்கசாமி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினா் கோ. நீலமேகம், மாவட்டக்குழு உறுப்பினா் ஆா். சி. பழனிவேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், பேராவூரணி வட்டம் பின்னவாசல் பொதுப் பாதை ஆக்கிரமிப்பு விவகாரத்தில், ஊராட்சி ஒன்றிய ஆணையா் சமாதானப் பேச்சுவாா்த்தையில் ஒப்புக் கொண்டபடி டிசம்பா் 31ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்பை அகற்றி தரவேண்டும். தொடா்ந்து காலதாமதம் ஏற்பட்டால், ஆவணத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது, நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் பேராவூரணி பேரூராட்சியில் ஐந்து வாா்டுகளை பெற்று போட்டியிடுவது, பிரதம மந்திரி, தமிழக முதலமைச்சா் பசுமை வீடு ஆகிய திட்டங்களில் பயனாளிகளுக்கு இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ள நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் , ஒன்றியச் செயலாளா் எம். இந்துமதி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் ஏ.வி. குமாரசாமி, ராமநாதன், சிதம்பரம், ஏ. ராஜா முகமது, எஸ். ஜகுபா்அலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...