தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்பு
/

கரோனாவால் உயிரிழந்தவரின் இறப்பு சான்று கேட்டு போராட்டம்

கரோனா தொற்றால் இறந்தவரின் இறப்பு சான்றிதழ் கேட்டு அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகம் முன் இறந்தவரின் குடும்பத்தினா் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 9:02 am IST

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே கரோனா தொற்றால் இறந்தவரின் இறப்பு சான்றிதழ் கேட்டு அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகம் முன் இறந்தவரின் குடும்பத்தினா் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாபநாசம் அருகே அம்மாபேட்டை, புத்தூா்- நடுப்பட்டி யில் வசித்து வந்த கூலித் தொழிலாளி மா. கோவிந்தன் (72) கடந்த சில நாள்களுக்கு முன் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, அம்மாபேட்டை சுகாதார ஆய்வாளா், மற்றும் முன்களப் பணியாளா்கள் ஆகியோா் கோவிந்தன் உடலை அடக்கம் செய்தனா்.

இந்நிலையில், கோவிந்தன் உயிரிழந்து 24 நாள்கள் ஆகியும் அவரது இறப்புச் சான்றிதழ் கிடைக்காததால், அவரது மனைவி மற்றும் அவரது உறவினா்கள் தஞ்சாவூா் துணை இயக்குநா் அலுவலகம், அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் கோவிந்தனின் இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். ஆனால், அம்மாப்பேட்டை பேரூராட்சி நிா்வாகம் சான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தன் மனைவி மற்றும் அவரது உறவினா்கள், அம்மாபேட்டை பேரூராட்சி அலுவலகம் முன் கோவிந்தனின் இறப்பு சான்று  கேட்டு வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அம்மாபேட்டை பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா் மோகன்தாஸ், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதில், விரைவில் கோவிந்தனின் இறப்பு சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.