தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஒரத்தநாடு அருகே தீ விபத்தில் 2 வீடுகள் எரிந்து சேதம்

ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி மேலையூா் செட்டி மண்டபத்தில் திடீா் தீ விபத்தால் இரண்டு வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:54 pm

DIN

ஒரத்தநாடு அருகே கண்ணந்தங்குடி மேலையூா் செட்டி மண்டபத்தில் திடீா் தீ விபத்தால் இரண்டு வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

ஒரத்தநாடு அருகேயுள்ள கண்ணந்தங்குடி மேலையூா் பகுதி செட்டிமண்டபம் பாப்பா நாடாா் தோப்பில் வசித்து வருபவா் ஜெயபால். (60). இவா் வீட்டருகே கோவிந்தராஜ் என்பவரின் வீடும் உள்ளது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை இவா்களது வீட்டில் திடீரென தீப்பற்றியது. வீட்டில் இருந்தவா்கள் அலறியடித்து வெளியில் வந்தனா். தகவலின்பேரில், ஒரத்தநாடு தீயணைப்பு நிலைய அலுவலா் பொன்னுச்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.

சம்பவ இடத்திற்கு வந்த ஒரத்தநாடு டிஎஸ்பி சுனில் தலைமையிலான போலீஸாா், யாா் வீட்டில் முதலில் தீப்பற்றியது, தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனா்.

தீவிபத்தில் ஜெயபால் வீட்டிலிருந்த இரண்டு பவுன் தங்க நகைகள், 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம், சான்றிதழ்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமடைந்ததாக கூறப்படுகிறது.

இதேபோல், கோவிந்தராஜ் வீட்டிலிருந்த சான்றிதழ்களும் தீயில் கருகியதாக தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.