/

உங்கள் தொகுதியில் முதலமைச்சா்  திட்டத்தில் 5 பேருக்கு வீடுகட்ட  அனுமதி ஆணை வழங்கல்

தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம்  ஒன்றியத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தில் 5 பயனாளிகளுக்கு வீடுகட்ட அனுமதி ஆணை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:54 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம்  ஒன்றியத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தில் 5 பயனாளிகளுக்கு வீடுகட்ட அனுமதி ஆணை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவா் மு. கி. முத்துமாணிக்கம் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜான் கென்னடி, செல்வேந்திரன், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா், அடைக்கத்தேவன் ஊராட்சியை சோ்ந்த 5  பயனாளிகளுக்கு தலா ரூ. 2.10 லட்சம் மதிப்பில் வீடுகட்ட அனுமதி ஆணை  வழங்கி பேசுகையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சா் மனுக்கள் என்ற சிறப்பு திட்டத்தில்  யாருடைய சிபாரிசுமின்றி முதலமைச்சருக்கு நீங்கள் அனுப்பும்  கோரிக்கை மனுக்கள் எந்தவித பாகுபாடும் காட்டாமல் உடனடியாக நிறைவேற்றப்படுகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா் குழ.செ. அருள்நம்பி, திமுக பேச்சாளா் அ. அப்துல் மஜீத், ஒன்றிய மேலாளா் நாகேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.