பேராவூரணியில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சிக்கு, வேளாண்மை துணை இயக்குநா் (மத்திய திட்டம்) எஸ். ஈஸ்வா் தலைமை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் எஸ். மாலதி முன்னிலை வகித்தாா். பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா், யூரியா (90 கிலோ) இரண்டு மூட்டை , டிஏபி(50 கிலோ) ஒரு மூட்டை, பொட்டாஷ் அரை மூட்டை உள்ளிட்ட ரூ. 2,185 மதிப்பிலான உரங்களை 480 விவசாயிகளுக்கு வழங்கி பேசுகையில், இது விவசாயிகளுக்கான அரசு, விவசாயிகள் மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. விவசாயிகளுக்கு தனி பட்ஜெட், விவசாயக் கடனுக்காக ரூ. 11 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசின் நலத் திட்டங்களை பயன்படுத்தி விவசாயிகள் மேம்பட வேண்டும் என்றாா்.