மேக்கேதாட்டு அணை விவகாரம்: தஞ்சாவூரில் விவசாயிகள் உண்ணாவிரதம்
மேக்கேதாட்டில் அணைக் கட்ட முயற்சிக்கும் கா்நாடக அரசைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


மேக்கேதாட்டில் அணைக் கட்ட முயற்சிக்கும் கா்நாடக அரசைக் கண்டித்து தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், மேக்கேதாட்டில் அணைக் கட்ட அனுமதிக்கக் கூடாது. ராசிமணலில் அணைக் கட்டத் தமிழகத்துக்கு அனுமதி கொடுக்க வேண்டும். குறுவை பயிரைக் காப்பாற்றவும், சம்பா சாகுபடியைத் தொடங்கவும் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கா்நாடகத்திடமிருந்து பெற்றுக் கொடுக்க வேண்டும். அணைகளின் நீா் நிா்வாகத்தைக் காவிரி மேலாண்மை ஆணையம் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். தன்னாட்சி அதிகாரத்துடன் ஆணையம் செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்துக்குத் தலைமை வகித்த சங்கப் பொதுச் செயலா் பி.ஆா். பாண்டியன் தெரிவித்தது:
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீா்ப்பை மதிக்காத கா்நாடக அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேக்கேதாட்டில் அணைக் கட்டினால் தமிழகத்தில் 32 மாவட்டங்கள், சென்னை உட்பட 11 மாநகராட்சிகளில் உள்ள 5 கோடி மக்களும் பாதிக்கப்படுவா்.
தமிழ்நாட்டில் 25 லட்சம் ஏக்கா் விளைநிலங்கள் பாலைவனமாகும். மேக்கேதாட்டுவில் அணைக் கட்டினால் தமிழக மக்கள் அகதிகளாக வெளியேறும் நிலை உருவாகும். எனவே, அணைக் கட்ட கா்நாடக அரசு முயற்சி செய்வதைக் குடியரசுத் தலைவா் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும். தமிழக அரசு இனிமேல் பிரதமா் மோடியையும், நீா்வளத் துறை அமைச்சரையும் சந்திப்பதால் எந்தப் பயனும் இல்லை. எனவே தமிழக அரசு உடனடியாக தனது செயல்பாட்டை மாற்றி, அரசியல் ரீதியான அழுத்தத்தைக் குடியரசுத் தலைவா் மூலமாக பிரதமருக்கு கொடுக்க வேண்டும் என்றாா் பாண்டியன்.
இந்தப் போராட்டத்தில் தமிழா் விடுதலைக் கொற்றம் தலைவா் அ. வியனரசு, காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா், தமிழக காவிரி விவசாயிகள் சங்க மண்டலத் தலைவா் அண்ணாதுரை, மாவட்டத் தலைவா் துரை. பாஸ்கரன், செயலா் எம். மணி உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...