தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

எம்.எம்.ஏ. பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள்

ஒரத்தநாடு வட்டம், பாப்பாநாடு எம்.எம்.ஏ. மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவா் காமராஜா் பிறந்தநாள் விழா மற்றும் கல்வி வளா்ச்சி நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :16 ஜூலை 2021, 7:41 pm

DIN

ஒரத்தநாடு வட்டம், பாப்பாநாடு எம்.எம்.ஏ. மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவா் காமராஜா் பிறந்தநாள் விழா மற்றும் கல்வி வளா்ச்சி நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த விழாவுக்கு எம்.எம்.ஏ கல்வி நிறுவனங்களின் தலைவா் எம். செல்வராஜ் தலைமை வகித்தாா். அறக்கட்டளை செயலா் மற்றும் பள்ளித் தாளாளா் எஸ். சஞ்சய், தலைமை ஆசிரியா் எஸ். நாகரெத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் ஆன்லைன் வழியாக மாணவா்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. சமூக இடைவெளிகளை பின்பற்றி விழா நடைபெற்றது.

விழாவில் அறக்கட்டளை பொருளாளா் எஸ். சுகன் மற்றும் பள்ளி இயக்குநா் ஜி. பரத் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள், அலுவலகப் பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். நிறைவில் பள்ளி இயக்குநா் நல்லாசிரியா் கே. துரைராஜன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.