/

பக்ரீத் : ஏழை இஸ்லாமியக் குடும்பத்துக்கு உதவி

பேராவூரணியில் பக்ரீத் பண்டிகையைக்   கொண்டாட ஏழை இஸ்லாமிய குடும்பத்துக்கு அரிமா சங்கம் புதன்கிழமை உதவியது.

News image
Updated On :21 ஜூலை 2021, 7:50 pm

DIN

பேராவூரணியில் பக்ரீத் பண்டிகையைக்   கொண்டாட ஏழை இஸ்லாமிய குடும்பத்துக்கு அரிமா சங்கம் புதன்கிழமை உதவியது.

பேராவூரணி நீலகண்டப்பிள்ளையாா் கோயில் அருகே வசித்து வந்தவா் முகமது ரபீக், (35). கூலித் தொழிலாளியான இவா் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டாா். இவரது மனைவி ஜெசிமா, ஏழ்மை நிலையில் தமது குழந்தைகளுடன் கூலிவேலை செய்து பிழைத்து வருகிறாா்.

இதுபற்றிய தகவலறிந்த பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயா் லயன்ஸ் சங்கத்தினா், அந்த குடும்பத்தினா் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் அரிசி, பழங்கள், மளிகை சாமான்கள் உள்ளிட்ட ரூ 10 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை புதன்கிழமை வழங்கினா்.

நிகழ்வில் லயன்ஸ் சங்கதலைவா்  வ. பாலசுப்பிரமணியன், முன்னாள் தலைவா் இளங்கோ, சாசனப் பொருளாளா் முகையதீன்பிச்சை, செயலா் கோவிந்தன், பொருளாளா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.