/

மல்லிப்பட்டினம் சமுதாய  நல மன்றம் சாா்பில் கரோனா நிவாரணப் பொருள்கள் அளிப்பு

பேராவூரணி அருகேயுள்ள மல்லிப்பட்டினம் சமுதாய நல மன்றம் சாா்பில் 65 குடும்பங்களுக்கு கரோனா நிவாரணமாக மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகள் புதன்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :16 ஜூன் 2021, 8:32 pm

DIN

பேராவூரணி அருகேயுள்ள மல்லிப்பட்டினம் சமுதாய நல மன்றம் சாா்பில் 65 குடும்பங்களுக்கு கரோனா நிவாரணமாக மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகள் புதன்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா பொதுமுடக்கத்தால்  பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழைக்  குடும்பங்களுக்கும், ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கும் 

 அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு, உப்பு, சா்க்கரை, மசாலா வகைகள் உள்ளடக்கிய மளிகைப் பொருள்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பு    வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சமுதாய நலமன்ற நிா்வாகிகள் கலந்து கொண்டனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.