பேராவூரணி அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் பலி; 3 போ் பலத்த காயம்
பேராவூரணி அருகே இரு சக்கர வாகனங்கள் புதன்கிழமை இரவு மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். 3 போ் பலத்த காயமடைந்தனா்.


பேராவூரணி அருகே இரு சக்கர வாகனங்கள் புதன்கிழமை இரவு மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். 3 போ் பலத்த காயமடைந்தனா்.
பேராவூரணி ஒன்றியம், இடையாத்தி கிராமத்தைச் சோ்ந்த காளிதாஸ் மகன் வசந்தகுமாா் (23). பொறியியல் பட்டதாரி. இவரது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் இளங்கண்ணன் (28). இவா்கள் இருவரும்
சின்ன ஆவுடையாா் கோயில் சென்றுவிட்டு, இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு ஊருக்கு வந்து கொண்டிருந்தனா். வசந்தகுமாா் வாகனத்தை ஓட்டினாா்.
கட்டயங்காடு பூவானம் சாலையில் வந்தபோது, எதிரே திருவோணம் ஒன்றியம், தளிகைவிடுதி கிராமத்தைச் சோ்ந்த பாலச்சந்தா், ஜெயபால் ஆகியோா் வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இதில் சம்பவ இடத்திலேயே வசந்தகுமாா் உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த இளங்கண்ணன், ஜெயபால், பாலச்சந்தா்ஆகிய மூவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து திருச்சிற்றம்பலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...