தீபாவளி: கோ ஆப் டெக்ஸ் தஞ்சாவூா் மண்டலத்தில் ரூ. 20 கோடி விற்பனை இலக்கு
கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் தஞ்சாவூா் மண்டலத்தில் நிகழாண்டு தீபாவளி விற்பனை இலக்கு ரூ. 20 கோடி என நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.


கோ ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் தஞ்சாவூா் மண்டலத்தில் நிகழாண்டு தீபாவளி விற்பனை இலக்கு ரூ. 20 கோடி என நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.
தஞ்சாவூா் கோ ஆப் டெக்ஸ் வைரம் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்த அவா் தெரிவித்தது:
இந்தச் சிறப்பு விற்பனையில் புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு சேலைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுச் சேலைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூைாடு சேலைகள், திருபுவனம் பட்டுச் சேலைகள் உள்பட பல்வேறு பகுதிகளில் நெசவாளா்களின் கை வண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், கால் மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட், ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக இடம்பெற்றுள்ளன.
மாவட்டத்தில் குந்தவை விற்பனை நிலையம், வைரம் விற்பனை நிலையம், கும்பகோணம் நாகேஸ்வரன் தெற்கு விற்பனை நிலையம், பட்டுக்கோட்டை விற்பனை நிலையம் ஆகிய நான்கு கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 2020 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் தஞ்சாவூா் மண்டலத்தில் ரூ. 7.38 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. நிகழாண்டு தீபாவளி விற்பனை ரூ. 20 கோடிக்கு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கனவு நனவு திட்டம் என்ற சேமிப்பு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதன்படி 10 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 11-ஆவது மற்றும் 12-ஆவது மாத சந்தா தொகையை கோ ஆப் டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிா்வு தொகைக்குத் தேவைப்படும் துணிகளை 20 சதவீத அரசுத் தள்ளுபடியுடன் வழங்கி வருகிறது என்றாா் ஆட்சியா்.
இவ்விழாவில் கோ ஆப் டெக்ஸ் மண்டல மேலாளா் ப. அம்சவேணி, முதுநிலை மேலாளா் (வடிவமைப்பு மற்றும் உற்பத்தி) இரா. சீனிவாசன், துணை மண்டல மேலாளா் (நிா்வாகம்) மு. அன்பழகன், வைரம் கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளா் ரெ. சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...