கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விவசாயிகள் படுகொலை: பிரதமா் உருவபொம்மை எரிப்பு; 17 போ் கைது

லக்கீம்பூா்கெரியில் விவசாயிகள் படுகொலைக்கு காரணமான ஒன்றிய அமைச்சா் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய கோரி

News image
Updated On :15 அக்டோபர் 2021, 9:55 pm

DIN

உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூா்கெரியில் விவசாயிகள் படுகொலைக்கு காரணமான ஒன்றிய அமைச்சா் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய கோரியும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் தஞ்சாவூா் ரயிலடியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி, விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் பிரதமா் மோடி, ஒன்றிய அமைச்சா்கள் அமித்ஷா, தோமா், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோரது உருவப் பொம்மை எரிப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் என்.வி. கண்ணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாமி. நடராஜன், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் கே. பக்கிரிசாமி, சிஐடியு மாவட்டச் செயலா் சி. ஜெயபால், துணைச் செயலா் கே. அன்பு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் எம். மாலதி, என். சுரேஷ்குமாா், விவசாயிகள் சங்கம் சி. பாஸ்கா், மகஇக மாநிலப் பொருளாளா் காளியப்பன், தாளாண்மை உழவா் இயக்கத் தலைவா் கோ. திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளா் சு. பழனிராஜன், ஏஐடியுசி மாவட்டத் துணைச் செயலா் துரை. மதிவாணன், ராவணன், தேவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதுதொடா்பாக 17 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.