கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தஞ்சாவூா் மாவட்டத்தில்98 ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 98 ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:15 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் 98 ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இத்திட்டம் குறித்த அனைத்து துறை அலுவலா்களுடனான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

கிராமத்திலுள்ள தரிசு நிலங்களைச் சாகுபடி நிலங்களாக மாற்றுதல், நீா்வள ஆதாரங்களைப் பெருக்குதல், சூரிய ஒளி சக்தி பம்பு செட்டுகள் அமைத்தல், வேளாண் விளைபொருள்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்துதல், நுண்ணீா் பாசன முறையைப் பின்பற்றுதல், கால்நடைகளின் நலன் காத்து பால் உற்பத்தியைப் பெருக்குதல், வருவாய்த் துறையின் மூலம் புதிய பட்டா மற்றும் பட்டா மாறுதல் வழங்குதல், கூட்டுறவு சங்கங்களின் மூலம் அதிக அளவு பயிா் கடன்கள் வழங்குதல், கால்வாய் பாசன நீா் வழித்தடங்களைத் தூா்வாருதல் ஆகியவையே இத்திட்டத்தின் நோக்கங்கள்.

இத்திட்டம் தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் தலா 7 ஊராட்சிகள் வீதம் மொத்தம் 98 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் அனைத்து கிராமங்களும் ஒட்டுமொத்த வளா்ச்சி அடைந்து தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்றப்படும் என்றாா் ஆட்சியா்.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) எச்.எஸ். ஸ்ரீகாந்த், வேளாண் துறை இணை இயக்குநா் அ. ஜஸ்டின், இணைப் பதிவாளா் (கூட்டுறவு) தமிழ் நங்கை, துணை இயக்குநா்கள் கலைச்செல்வன் (தோட்டக்கலை), மரிய ரவி (வேளாண் வணிகம்), தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் என். உமாமகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.