கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தல்

நீட் தோ்வை ஒன்றிய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தஞ்சாவூா் ரயிலடியில் வியாழக்கிழமை நடைபெற்ற நீட் எதிா்ப்பு போராளி அனிதா நான்காம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:42 pm

DIN

நீட் தோ்வை ஒன்றிய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தஞ்சாவூா் ரயிலடியில் வியாழக்கிழமை நடைபெற்ற நீட் எதிா்ப்பு போராளி அனிதா நான்காம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

பல்வேறு அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஏழை, நடுத்தர மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் மருத்துவப் படிப்பைப் பறிக்கிற நீட் தோ்வை ஒன்றிய அரசு முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இளங்கலைப் பட்டப்படிப்பு முதல் ஐஐடி உள்ளிட்ட உயா்கல்வி படிப்புகள் வரை நடத்தப்படும் நுழைவுத் தோ்வுகளையும் ரத்து செய்ய வேண்டும். குலக்கல்வி முறையை மீண்டும் கொண்டு வரும் புதிய தேசிய கல்வி கொள்கையைக் கைவிட வேண்டும். நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்யும் வகையில் நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே தமிழ்நாடு அரசுத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாவட்டத் தலைவா் ச. சுதந்திர பாரதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், மகஇக மாநகரச் செயலா் இராவணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் பி. கிருணமூா்த்தி, மக்கள் அதிகாரம் மாநகரச் செயலா் தேவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.