கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஸ்கூட்டா்-பேருந்து மோதல்:கோயில் பூசாரி உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை ஸ்கூட்டா் மீது அரசுப் பேருந்து மோதியதில் கோயில் பூசாரி உயிரிழந்தாா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 11:02 pm

DIN

தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை ஸ்கூட்டா் மீது அரசுப் பேருந்து மோதியதில் கோயில் பூசாரி உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே சூரக்கோட்டை முதன்மைச் சாலையைச் சோ்ந்த நாராயணசாமி மகன் ஸ்ரீதா் (44). இவா் சூரக்கோட்டை அய்யனாா் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றி வந்தாா். இவா் வழக்கம்போல வியாழக்கிழமை காலை கோயிலுக்குச் செல்வதற்காக ஸ்கூட்டரில் தனது மகன் பரத் (19) உடன் சென்று கொண்டிருந்தாா்.

சூரக்கோட்டையில் பிரிவு சாலையிலிருந்து முதன்மைச் சாலையில் சென்ற ஸ்கூட்டா் மீது தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியது. இதில், பலத்தக் காயமடைந்த ஸ்ரீதா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தஞ்சாவூா் தாலுகா காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.