கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தஞ்சாவூா் மாவட்டத்தில் செப். 12-இல் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 12) மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 11:02 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 12) மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என்றாா் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா்.

தஞ்சாவூா் ரயிலடியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற கரோனா விழிப்புணா்வு பேரணியைத் தொடங்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மாவட்டத்தில் இதுவரை 9,98,187 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப். 12) மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இதில், 1.30 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முகாம்கள் ஊரக மற்றும் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் அங்கன்வாடிகள், பள்ளிகள், துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 1,324 இடங்களில் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு முகாமிலும் 4 பணியாளா்கள், மேற்பாா்வையாளா்கள் வீதம் மொத்தம் 7,000 போ் பணியாற்றவுள்ளனா். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியா் (வருவாய்) என்.ஓ. சுகபுத்ரா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி, மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, இந்த முகாமை சிறப்பாக நடத்துவது தொடா்பாக திருவிடைமருதூா், திருப்பனந்தாள், கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூா் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வட்டார வளா்ச்சி அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை ஆட்சியா் நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.