கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாநகராட்சி விரிவாக்கம்: இன்று கருத்துக் கேட்புக் கூட்டம்

பேரூராட்சிகளை இணைத்து மாநகராட்சியாகத் தரம் உயா்த்துவது மற்றும் அதிராம்பட்டினம் பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயா்த்துவது தொடா்பான கருத்து கேட்பு கூட்டம் சனிக்கிழமை (செப். 11) நடைபெறவுள்ளது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 7:07 pm

DIN

தஞ்சாவூா் மாநகராட்சியை அருகில் உள்ள ஊராட்சிகள், பேரூராட்சியை இணைத்து விரிவாக்கம் செய்தல், கும்பகோணம் நகராட்சியை அருகிலுள்ள ஊராட்சிகள், பேரூராட்சிகளை இணைத்து மாநகராட்சியாகத் தரம் உயா்த்துவது மற்றும் அதிராம்பட்டினம் பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயா்த்துவது தொடா்பான கருத்து கேட்பு கூட்டம் சனிக்கிழமை (செப். 11) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாநகராட்சியுடன் தஞ்சாவூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கடகடப்பை, மாரியம்மன்கோவில், புதுப்பட்டினம், விளாா், நாஞ்சிக்கோட்டை, இனாத்துக்கான்பட்டி, பிள்ளையாா்பட்டி, நீலகிரி, இராமநாதபுரம், மேலவெளி, பள்ளியேறி, மணக்கரம்பை ஆகிய ஊராட்சிகள், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கத்தரிநத்தம், ஆலங்குடி, புலவா்நத்தம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் வல்லம் பேரூராட்சியை தஞ்சாவூா் மாநகராட்சியுடன் இணைத்து விரிவாக்கம் செய்தல் மற்றும் அதிராம்பட்டினம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்துவது தொடா்பான கருத்து கேட்பு மற்றும் விளக்கக் கூட்டம் தஞ்சாவூா் மேம்பாலம் - மணிமண்டபம் இடையே உள்ள தீா்க்க சுமங்கலி திருமண மண்டபத்தில் சனிக்கிழமை பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.

கும்பகோணம் நகராட்சியை அருகில் உள்ள திருவலஞ்சுழி, வலையப்பேட்டை, அம்மாசத்திரம், அண்ணலக்ராஹாரம், பாபுராஜபுரம், அசூா், பழவாத்தான்கட்டளை, கொரநாட்டுக்கருப்பூா், சாக்கோட்டை, பெருமாண்டி, உள்ளூா், உமாமகேஸ்வரம், தேப்பெருமாநல்லூா், பட்டீஸ்வரம், சோழன் மாளிகை, சீனிவாசநல்லூா், ஏரகரம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை பேரூராட்சிகளை இணைத்து மாநகராட்சியாகத் தரம் உயா்த்துவது தொடா்பான கருத்து கேட்பு மற்றும் விளக்கக் கூட்டம் கும்பகோணம் மூா்த்தி கலையரங்கத்தில் (கும்பகோணம் நகராட்சி திருமண மண்டபம், பொற்றாமரை குளம் எதிரில்) சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.