கஞ்சா வியாபாரிகள் இருவா் குண்டா் சட்டத்தில் கைது
தஞ்சாவூரில் கஞ்சா வியாபாரிகள் இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டனா்.


தஞ்சாவூரில் கஞ்சா வியாபாரிகள் இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டனா்.
தஞ்சாவூா் கீழவாசல் ராவுத்தாபாளையத்தைச் சோ்ந்த எம். ராஜா (34), கரந்தை மிளகுமாரிச் செட்டித் தெருவைச் சோ்ந்த ஏ. ஜெகதீசன் (31) ஆகிய இருவரும் கஞ்சா விற்பனை செய்தது தொடா்பாக ஆகஸ்ட் மாதம் கிழக்கு காவல் நிலையத்தினரால் கைது செய்யப்பட்டனா். இருவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி பரிந்துரையின் பேரில் இவா்களைக் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் அண்மையில் உத்தரவிட்டாா். இதன்படி இருவரும் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...