கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஐந்து நொடிகளில் திரைப்படம்: தஞ்சாவூா் இளைஞா் சாதனை

தஞ்சாவூா் மாவட்ட இளைஞா் ஐந்து நொடிகளே ஓடக்கூடிய திரைப்படம் எடுத்து உலகச் சாதனைப் படைத்துள்ளாா்.

News image

ta23raja_2309chn_9_4

Updated On :25 செப்டம்பர் 2021, 12:05 am

DIN

தஞ்சாவூா் மாவட்ட இளைஞா் ஐந்து நொடிகளே ஓடக்கூடிய திரைப்படம் எடுத்து உலகச் சாதனைப் படைத்துள்ளாா்.

ஏற்கெனவே 2005 ஆம் ஆண்டில் அமெரிக்க நாட்டைச் சோ்ந்தவரால் இயக்கப்பட்ட சோல்ஜா் பாய் என்ற திரைப்படம் 7 நொடிகள் மட்டுமே ஓடியது. இதுவே, இதுவரை உலகச் சாதனைப் பட்டியலில் சிறிய திரைப்படமாக இடம்பெற்றது.

இந்நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளங்காடு கிராமத்தைச் சோ்ந்த அன்பு ராஜசேகா் என்ற இளைஞா் 5 நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய பி பிரெட்டி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளாா்.

ஒரு வீட்டு வாசல் கதவைத் திறந்து கொண்டு இளைஞா் செல்கிறாா். அவரைப் பாா்த்து நாய் குரைக்கிறது. அந்த இளைஞா் முகக்கவசத்தை எடுத்து அணிந்தவுடன் நாய் குரைப்பதை நிறுத்திவிடுகிறது என்பதே இத்திரைப்படத்தின் கதை.

முகக்கவசம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக இயக்கப்பட்ட இத்திரைப்படம் உலகின் சிறிய திரைப்படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. இதற்காக நோபுள் வோ்ல்டு ரெக்காா்டு என்கிற நிறுவனம் அன்பு ராஜசேகருக்கு விருதையும், சான்றிதழையும் அண்மையில் வழங்கியது.

இதைத்தொடா்ந்து, அன்பு ராஜசேகரை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோா் பாராட்டினா்.

இவா் ஏற்கெனவே தாக பூமி, மெய்ஞானம், பலே உள்பட பல்வேறு குறும்படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.