கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சபியா படுகொலையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

தில்லி காவல் அலுவலா் சபியா சைஃபியா வன்புணா்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ta24demo_2409chn_9_4

Updated On :25 செப்டம்பர் 2021, 12:03 am

DIN

தில்லி காவல் அலுவலா் சபியா சைஃபியா வன்புணா்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு, தஞ்சை மாவட்ட அனைத்து மொஹல்லா ஜமாத் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு குழு நிா்வாகிகள் எச். அப்துல் நசீா், என். குருசாமி, யு. காதா் உசேன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கோ. நீலமேகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மைய மாவட்டச் செயலா் ச. சொக்கா ரவி, திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சி. அமா்சிங், காங்கிரஸ் லட்சுமி நரசிம்மன், மதிமுக தெற்கு மாவட்டச் செயலா் வி. தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.