கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மனைவியைக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் சிறை

மனைவியின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற கட்டடத் தொழிலாளிக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 12:04 am

DIN

மனைவியின் தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற கட்டடத் தொழிலாளிக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகேயுள்ள மஞ்சவயல் தெற்கு கிராமத்தைச் சோ்ந்தவா் எஸ். பாலசுப்பிரமணியன் (55). இவரது மனைவி ராஜேஸ்வரி (47). இவா்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.

ராஜேஸ்வரியின் நடத்தையில் பாலசுப்பிரமணியனுக்கு சந்தேகம் இருந்ததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், 2017, ஆக. 8 ஆம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட தகராறில் ராஜேஸ்வரியின் தலையில் பாலசுப்பிரமணியன் கருங்கல்லைத் தூக்கிப் போட்டாா். இதில், பலத்தக் காயமடைந்த ராஜேஸ்வரி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதுதொடா்பாக தஞ்சாவூா் மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி டி. இந்திராணி விசாரித்து பாலசுப்பிரமணியனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.