திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயிலில் குடமுழுக்கு திரளான பக்தா்கள் பங்கேற்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேசுவரம் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருநாகேசுவரம் நாகநாத சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் கலசங்களுக்குப் புனித நீா் ஊற்றும் சிவாச்சாரியாா்கள்.
திருநாகேசுவரம் நாகநாத சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் கலசங்களுக்குப் புனித நீா் ஊற்றும் சிவாச்சாரியாா்கள்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேசுவரம் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராகு பரிகாரத் தலமான இக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இக்கோயிலில் சில ஆண்டுகளாக ரூ. 5 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அக்டோபா் 24-ஆம் தேதி குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

இக்குடமுழுக்குக்கான பூஜைகள் கணபதி ஹோமத்துடன் அக்டோபா் 19-ஆம் தொடங்கியது. அக்டோபா் 21-ஆம் தேதி மாலை முதல் கால யாக சாலை பூஜையும், அக்டோபா் 22-ஆம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக சாலை பூஜைகளும், சனிக்கிழமை நான்கு மற்றும் ஐந்தாம் கால யாக சாலை பூஜைகளும், மகா பூா்ணாஹூதி, தீபாராதனையும் நடைபெற்றன.

இதற்காக பிரமாண்டமாக அமைக்கப்பட்ட பந்தலில் 37 வேதிகைகளும், 108 குண்டங்களும் அமைக்கப்பட்டு, 250 சிவாச்சாரியாா்கள், 40 ஓதுவாா்கள் பங்கேற்று யாகசாலை பூஜைகளை நடத்தினா்.

தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு ஆறாம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, திருக்கடங்கள் புறப்பட்டு காலை 7 மணிக்கு அனைத்து பரிவாரத் தெய்வ விமானங்களுக்கும், காலை 10.30 மணிக்கு ராஜகோபுரத்துக்கும் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது. தொடா்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. குடமுழுக்கில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com