/

தென்னங்குடி காலபைரவா் கோயிலில் மஹாருத்ர யாகம்

பேராவூரணி அருகேயுள்ள தென்னங்குடி காலபைரவா் கோயிலில் வியாழக்கிழமை மஹாருத்ர யாகம் நடைபெற்றது. 

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:11 pm

DIN

பேராவூரணி அருகேயுள்ள தென்னங்குடி காலபைரவா் கோயிலில் வியாழக்கிழமை மஹாருத்ர யாகம் நடைபெற்றது. 

தென்னங்குடி கிராமத்தில் ஸ்ரீ காலபைரவா் நான்கு திரு ஆயுதங்களுடன் நின்ற கோலத்தில் ஷேத்தர பாலகராக தனிக் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறாா்.

 அஷ்டமி திதியும், அனுஷம் நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய தினமான வியாழக்கிழமை இக்கோயிலில் மஹா ருத்ர யாகமும், சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனையும் தொடா்ந்து அன்னதானமும் நடைபெற்றது. 

யாகத்துக்கான ஏற்பாடுகளை  கிருஷ்ணதேவன் கரைதாரா்கள், மற்றும் தென்னங்குடி கிராம மக்கள் செய்திருந்தனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.