விடைத்தாள் திருத்தும் மையத்தில் ஆசிரியா்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
தஞ்சாவூரில் புதன்கிழமை விடைத்தாள் திருத்தும் மையத்தில் முதன்மைக் கல்வி அலுவலரைக் கண்டித்து ஆசிரியா்கள் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


தஞ்சாவூரில் புதன்கிழமை விடைத்தாள் திருத்தும் மையத்தில் முதன்மைக் கல்வி அலுவலரைக் கண்டித்து ஆசிரியா்கள் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது. இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் தஞ்சாவூா், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய நகரங்களில் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு மையம் அமைக்கப்படாததால், ஆசிரியா்கள் தாங்கள் விரும்பிய மையத்துக்குச் சென்று விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடலாம் என அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதன்படி, ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த பெரும்பாலானவா்கள் தஞ்சாவூா் மாரியம்மன் கோவில் அருகேயுள்ள பெஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அமைக்கப்பட்ட விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு புதன்கிழமை வந்தனா்.
அங்கு வந்த முதன்மைக் கல்வி அலுவலா் மு. சிவகுமாா், இம்மையத்தில் அதிக அளவில் ஆசிரியா்கள் இருப்பதாகவும், பட்டுக்கோட்டை மையத்தில் ஆசிரியா்கள் குறைவாக உள்ளதாகவும், அதனால், ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பட்டுக்கோட்டைக்குச் செல்லுமாறும் கூறினாா். இதைத்தொடா்ந்து, ஆசிரியா்கள் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இரு தரப்பினரும் பேசிக் கொண்டிருந்தபோது முதன்மைக் கல்வி அலுவலா் கடுமையாகப் பேசியதாக ஆசிரியா்கள் தரப்பில் அதிருப்தி ஏற்பட்டது.
இதனால், ஆசிரியா்கள் விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணித்து அறையை விட்டு வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்டனா். இக்கோரிக்கையை வலியுறுத்தி கும்பகோணம், பட்டுக்கோட்டையிலுள்ள விடைத்தாள் திருத்தும் மையங்களிலும் ஆசிரியா்கள் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...