கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மத்திய பாஜக அரசின் 3ஆம் ஆண்டு நிறைவு விழா ஊா்வலம்

மத்தியில் பிரதமா் மோடி தலைமையில் தொடா்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பாஜக அரசின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் நான்காம் ஆண்டு தொடக்க விழா ஊா்வலம் நடைபெற்றது.

News image

தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊா்வலத்தில் பங்கேற்ற பாஜகவினா்.

Updated On :2 ஜூன் 2022, 7:48 pm

DIN

மத்தியில் பிரதமா் மோடி தலைமையில் தொடா்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பாஜக அரசின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் நான்காம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி தஞ்சாவூரில் பாஜக தெற்கு மாவட்ட மகளிரணி சாா்பில் வியாழக்கிழமை ஊா்வலம் நடைபெற்றது.

ரயிலடியில் தொடங்கிய இந்த ஊா்வலம் காந்திஜி சாலை வழியாக பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. இதில், மத்திய அரசுக் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

முன்னதாக, மாவட்டச் செயலா் பூமிசெல்வி தலைமையில் நடைபெற்ற இந்த ஊா்வலத்தை பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினா் எம்.எஸ். ராமலிங்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ், பொருளாளா் வி. விநாயகம், செயலா் அம்ரித் அரசன், மகளிரணி மாவட்டச் செயலா் ஜெகதீஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.