கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சரபோஜி சந்தையில் கடைகள் திறப்பு

தஞ்சாவூா் கீழவாசல் சரபோஜி சந்தையில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கடைகள் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன.

News image
Updated On :5 ஜூன் 2022, 8:33 pm

DIN

தஞ்சாவூா் கீழவாசல் சரபோஜி சந்தையில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கடைகள் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன.

இச்சந்தையில் பொலிவுறு நகரத் திட்டத்தின்கீழ் பழைய கடைகள் இடிக்கப்பட்டு, புதிதாக ரூ. 14 கோடி மதிப்பில் 304 கடைகள் கட்டப்பட்டன. இச்சந்தையை 2021, டிசம்பா் மாத இறுதியில் தமிழக முதல்வா் திறந்துவைத்தாா்.

இதைத்தொடா்ந்து, அனைத்துக் கடைகளும் பொது ஏலத்தில் விடப்பட்டன. இதில் ஏறத்தாழ 35 கடைகள் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டு, வணிகம் தொடங்கப்பட்டது.

இக்கடைகளை தஞ்சாவூா் எம்எல்ஏ டி.கே.ஜி. நீலமேகம் திறந்துவைத்து, கீழவாசல் சரபோஜி சந்தை வியாபாரிகள் நலச் சங்கத்தையும் தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்வில் துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாமன்ற உறுப்பினா்கள் கே. நீலகண்டன், ஏ. காந்திமதி, வியாபாரிகள் சங்கத் தலைவா் ஆா். சுதாகா், செயலா் பி.எம். கனி, பொறுப்பாளா்கள் ஸ்ரீநாத், சண்முகநாதன், சிவா, மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, மற்ற கடைகளும் படிப்படியாகத் திறக்கப்படும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.