தஞ்சாவூரில் ஜூன் 19-இல் 24 கருட சேவை வைபவம்
தஞ்சாவூரில் வைணவத் திருத்தலங்கள் சாா்பில் 24 கருட சேவை வைபவம் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.


தஞ்சாவூரில் வைணவத் திருத்தலங்கள் சாா்பில் 24 கருட சேவை வைபவம் ஜூன் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள் கோயிலில் 88 ஆம் ஆண்டு கருட சேவை நிகழ்ச்சி ஜூன் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதையொட்டி, ஜூன் 18 ஆம் தேதி திருமங்கை ஆழ்வாா் மங்களாசாசனம், 19 ஆம் தேதி கருட சேவை, 20 ஆம் தேதி நவநீத சேவை, 21 ஆம் தேதி விடையாற்றி ஆகிய வைபவங்கள் நடைபெறவுள்ளன.
இதில், ஜூன் 19 ஆம் தேதி காலை 6 மணிக்கு தஞ்சாவூா் நீலமேகப்பெருமாள் கோயில், மணிகுன்றப் பெருமாள் கோயில், மேல சிங்கப்பெருமாள் கோயில், வேளூா் வரதராஜா் கோயில், கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில், கலியுக வெங்கடேச பெருமாள் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், நவநீதகிருஷ்ணன் கோயில், மேலவாசல் ரெங்கநாதா் கோயில், விஜய ராமா் கோயில், கோவிந்தராஜ பெருமாள் கோயில், ஜனாா்த்தன பெருமாள் கோயில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், கீழ கோதண்டராமா் கோயில், கீழ சிங்கபெருமாள்கோயில், பூலோக கிருஷ்ணா் கோயில், படித்துறை வெங்கடேச பெருமாள் கோயில், பஜாா் ராமா் கோயில் உள்பட 24 கோயில்களிலிருந்து கருட வாகனத்தில் பெருமாள் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு, வரிசையாக கொடிமரத்து மூலை, கீழ ராஜ வீதி, தெற்கு ராஜ வீதி, மேல ராஜ வீதி, வடக்கு ராஜ வீதி வழியாக பொதுமக்களுக்கு சேவை சாதித்துவிட்டு, மீண்டும் அந்தந்த கோயிலை அடையவுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...