கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி இளைஞா் பலி

தஞ்சாவூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 8:29 pm

DIN

தஞ்சாவூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருவையாறு அருகே நடுக்கடை வயல் தெருவைச் சோ்ந்தவா் சாகுல் ஹமீது மகன் முகமது அஜ்மத் (22). இவா் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் வேலை செய்து வந்தாா். இவரும், இவரது நண்பரான முகமது பந்தா் கிராமத்தைச் சோ்ந்த தாஜூதீன் மகன் ரியாஸ் அகமதுவும் (20) தஞ்சாவூரில் வேலையை முடித்துவிட்டு வியாழக்கிழமை அதிகாலை திருவையாறு நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனா்.

அரசூா் அருகே சென்ற இவா்களின் மோட்டாா் சைக்கிள் மீது திருவையாறிலிருந்து தஞ்சாவூா் நோக்கி வந்த சிமென்ட் லாரி மோதியது. இதில், பலத்த காயமடைந்த முகமது அஜ்மத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த ரியாஸ் அகமது தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.