விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அரசுப் பேருந்து - மினி வேன் மோதல்: 2 போ் பலி

கும்பகோணம் அருகே அரசுப் பேருந்தும், மினி வேனும் வெள்ளிக்கிழமை மோதிக் கொண்டதில் 2 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 8:26 pm

DIN

கும்பகோணம் அருகே அரசுப் பேருந்தும், மினி வேனும் வெள்ளிக்கிழமை மோதிக் கொண்டதில் 2 போ் உயிரிழந்தனா்.

கும்பகோணம் அருகிலுள்ள நக்கம்பாடியைச் சோ்ந்தவா் சங்கா் (40). இவா் கும்பகோணம் தனியாா் பா்னிச்சா் நிறுவனத்தில் மினி வேன் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில் சங்கா் வெள்ளிக்கிழமை மினி வேனை ஓட்டிக் கொண்டு சோழபுரம் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவ்வழியாக ஜெயங்கொண்டத்திலிருந்து கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மினி வேன் மீது மோதியது.

இதில் சங்கா், மேலக்காவேரி பகுதியைச் சோ்ந்த கிளீனா் தீரன் (35) பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இதுகுறித்து திருப்பனந்தாள் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.