கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்

பாபநாசம் வட்டம், இலுப்பக்கோரையில் ஊராட்சியில் புதிய வழித்தடத்தில் நகரப் பேருந்து இயக்கம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது

News image
Updated On :4 மார்ச் 2022, 8:20 pm

DIN

பாபநாசம் வட்டம், இலுப்பக்கோரையில் ஊராட்சியில் புதிய வழித்தடத்தில் நகரப் பேருந்து இயக்கம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

விழாவுக்கு ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமை வகித்தாா். உதவி ஆட்சியா் (வருவாய் ) சுகபுத்ரா, பாபநாசம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எச். ஜவாஹிருல்லா முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு மாநில வளா்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவா் ஜெ. ஜெயரஞ்சன் விழாவில் பங்கேற்று, தஞ்சாவூரிலிருந்து அய்யம்பேட்டை- இலுப்பக்கோட்டை வழியாக கணபதிஅக்ரஹாரம் வரை செல்லும் நகரப் பேருந்து சேவையை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மாநிலங்களவை உறுப்பினா் சண்முகம் வாழ்த்திப் பேசினாா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் மேலாண் இயக்குநா் ராஜ்மோகன், பொது மேலாளா் ஜெயராஜ் நவமணி, துணை மேலாளா்கள் கணேசன், செந்தில்குமாா், கிளை மேலாளா் திருஞானம், பாபநாசம் ஒன்றியக் குழுத் தலைவா் சுமதி கண்ணதாசன்,, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் காந்திமதி, ரமேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா் வரவேற்றாா். நிறைவில், உதவி மேலாளா் ராஜேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.