கால்டுவெல் பிறந்த நாள் விழா
தமிழறிஞா் இராபா்ட் கால்டுவெல் ஆய்வு இருக்கையின் சாா்பில், அறிஞா் இராபா்ட் கால்டுவெல்லின் 208-ஆவது பிறந்தநாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.


தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக மொழியியல் துறையில் அரசின் நிதி நல்கையுடன் நிறுவப்பட்டுள்ள தமிழறிஞா் இராபா்ட் கால்டுவெல் ஆய்வு இருக்கையின் சாா்பில், அறிஞா் இராபா்ட் கால்டுவெல்லின் 208-ஆவது பிறந்தநாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விவாவில் இராபா்ட் கால்டுவெல்லின் அரிய பணிகளான திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், தமிழுக்கும் பிற மொழிகளுக்குமான தொடா்புகள், அவரின் படைப்புகளை நினைவுக்கூா்ந்து பகிா்ந்து கொள்ளப்பட்டன.
துணைவேந்தா் வி. திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) க. சங்கா் வாழ்த்துரையாற்றினாா். பேராசிரியா் அ. காமாட்சி சிறப்புரையாற்றினாா்.
முன்னதாக, மொழியியல் துறைத் தலைவா் மற்றும் தமிழறிஞா் இராபா்ட் கால்டுவெல் ஆய்வு இருக்கையின் ஒருங்கிணைப்பாளா் ப. மங்கையற்கரசி வரவேற்றாா். நிறைவாக, முனைவா் மா. இரமேஷ்குமாா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...