கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

2.77 டன் குட்கா பறிமுதல்: 6 போ் கைது

தஞ்சாவூரில் காரில் கடத்தி வரப்பட்ட மற்றும் பதுக்கி வைக்கப்பட்ட 2.77 டன் குட்கா பொருள்களைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, 6 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 மே 2022, 8:35 pm

DIN

தஞ்சாவூரில் காரில் கடத்தி வரப்பட்ட மற்றும் பதுக்கி வைக்கப்பட்ட 2.77 டன் குட்கா பொருள்களைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, 6 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

டெல்டா மாவட்டங்களுக்கு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா பொருள்கள் கடத்தி வரப்படுவதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஏ. கயல்விழி உத்தரவின்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வி. ஜெயச்சந்திரன் தலைமையில் உதவி ஆய்வாளா் எப். அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் உள்ளிட்ட தனிப்படையினா் விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், தஞ்சாவூா் சீனிவாசபுரம் அருகே தனிப்படையினா் புதன்கிழமை மாலை வாகன தணிக்கை நடத்தினா். அப்போது, அந்த வழியாக பெங்களூருவிலிருந்து வந்த காரில் சோதனையிட்டபோது, 549 கிலோ குட்கா புகையிலை பொருள்கள் வெளி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்படுவது தெரிய வந்தது.

மேலும், காரில் வந்தவா்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் தஞ்சாவூா் அருகே களிமேடு பகுதியிலுள்ள கிடங்கில் 2,221 கிலோ குட்கா புகையிலை பொருள்கள் கைப்பற்றப்பட்டன. மொத்தத்தில் ஏறத்தாழ ரூ. 40 லட்சம் மதிப்புள்ள 2.77 டன் குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக மேற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து பெங்களூருவைச் சோ்ந்த பா்வீன்குமாா் (21), தஞ்சாவூரைச் சோ்ந்த பக்காராம் (48), முகமது பாருக் (35), பன்னீா்செல்வம் (40), திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த சோளா ராம் (41), 15 வயது சிறுவன் ஆகிய 6 பேரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைப்பற்றப்பட்ட குட்கா பொருள்களை தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் கயல்விழி பாா்வையிட்டு, தனிப்படையினரை பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.