இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

தஞ்சை: விதை நெல் விலை உயர்வு; விவசாயிகள் வேதனை

கடந்த வாரத்தில் 1,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு சிப்பம் (30கிலோ) விதை நெல், தற்போது 150 ரூபாய் உயர்ந்து 1,150  ரூபாய்க்கு விற்பதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

News image
Updated On :25 மே 2022, 3:28 pm IST

தஞ்சை: குறுவை சாகுபடிக்கு பாய் நாற்றங்கால் தயாரிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரத்தில் 1,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு சிப்பம் (30கிலோ) விதை நெல், தற்போது 150 ரூபாய் உயர்ந்து 1,150  ரூபாய்க்கு விற்பதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மே 24 ஆம் தேதி மேட்டூர் அணையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் திறக்கப்பட்ட தண்ணீர் மே 26 அல்லது 27 ஆம் தேதிக்குள் கல்லணை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மே 27 அல்லது 28 ஆம் தேதி தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்னும் ஏழு நாட்களுக்குள் விளைநிலங்களுக்குள் தண்ணீர் வந்துவிடும் என்பதால், குறுவை முதற்கட்ட பணிகளில்  விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் இயந்திர நடவுக்காக, பாய் நாற்றங்கால் தயாரிக்கும் பணியில் மும்முரமாக விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஆடுதுறை 36, கோ 51, ஏ.எஸ்.டி.16, டி.பி.எஸ்.5 உள்ளிட்ட நெல் ரகங்களை விவசாயிகள் தயார் செய்து கொண்டிருக்கின்றனர்.  

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இயந்திர நடவுக்காக நாற்றங்கால் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். தற்போதே விதை நெல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள், கடந்த வாரங்களில் ஆடுதுறை 36 உள்ளிட்ட விதை நெல் 1,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.  ஆனால் இன்று 150 ரூபாய் அதிகரித்து 1,150 ரூபாய்க்கு விற்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் யூரியா போன்ற உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு நிலையங்களில் கிடைப்பதில்லை என்றும், தனியார் உர கடைகளில் மட்டுமே விற்கப்படுவதாகவும், ஆனால் கடைகளில் சம்பந்தமே இல்லாத  வேறு உரங்களை கட்டாயப்படுத்தி விற்பதாக குற்றம் சாட்டுகின்றனர். அந்த உரங்களை எதற்கு வாங்குகிறோம், எதற்கு பயன்படும் என்று கூட விவசாயிகளுக்கு தெரியவில்லை.

எனவே அதை முறைப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைக்கும். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே அறுவடை பணிகள் நிறைவடைந்து விடும் எனவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.