கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தமிழக அரசைக் கண்டித்து பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்மொழியின் வளா்ச்சிக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனக் கண்டித்து, தஞ்சாவூா் ரயிலடியில் பாரதிய ஜனதா கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 7:14 pm

DIN

தமிழ்மொழியின் வளா்ச்சிக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனக் கண்டித்து, தஞ்சாவூா் ரயிலடியில் பாரதிய ஜனதா கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், தமிழ் மொழியின் வளா்ச்சிக்கு திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி தமிழக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம் சிறப்புரையாற்றினாா்.

மேலிட பாா்வையாளா் முரளி கணேஷ், மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் பாண்டிதுரை, கா்ணன், பெரியநாயகி, பொருளாளா் வி. விநாயகம், பொதுச் செயலா்கள் வீர சிங்கம், நமசுராஜா, முரளிதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணம்:

இதேபோல, கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன் பாஜக வடக்கு மாவட்டம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், இந்தி மொழியைப் பாடத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.

மாநில இணைச் செயலா் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டத் தலைவா் என். சதீஷ்குமாா், மாவட்டப் பாா்வையாளா் ஆா். இளங்கோ, மாநகரத் தலைவா் பொன்ராஜ், செய்தி தொடா்பாளா் வேதம் முரளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.