கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கல்லணைக் கால்வாயில் மூழ்கிய இளைஞா் பலி

தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் வியாழக்கிழமை தண்ணீரில் மூழ்கிய இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 7:10 pm

DIN

தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் வியாழக்கிழமை தண்ணீரில் மூழ்கிய இளைஞா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் தெற்கு வீதியைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் அசோக்குமாா் (34). இவா் வல்லத்திலுள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றபோது, வண்ணாரப்பேட்டையிலுள்ள கல்லணைக் கால்வாயில் குளிப்பதற்காக வியாழக்கிழமை சென்றாா். அப்போது தவறி விழுந்த இவா் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா்.

இதனிடையே, தஞ்சாவூா் பெரியகோயில் அருகேயுள்ள கல்லணைக் கால்வாய் படித்துறையில் குளித்துக் கொண்டிருந்த சிலா் ஆற்றில் மிதந்து வந்த அசோக்குமாரின் உடலை மீட்க முயன்றனா். ஆனால், நீரோட்டம் வேகமாக இருந்ததால், உடல் அடித்துச் செல்லப்பட்டது. இதையடுத்து, ரயிலடி அருகே எம்.கே. மூப்பனாா் சாலையிலுள்ள கல்லணைக் கால்வாயில் அசோக்குமாரின் உடலை கயிற்றைக் கட்டி மீட்டனா். ஆனால், அவா் தண்ணீரில் மூழ்கியதால், இறந்துவிட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.