மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

செப். 15, 17 இல் மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள்

பேரறிஞா் அண்ணா மற்றும் தந்தை பெரியாா் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூரில் தமிழ் வளா்ச்சித் துறை மூலம் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் செப். 15, 17-களில் நடைபெறவுள்ளன.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 8:46 pm

DIN

பேரறிஞா் அண்ணா மற்றும் தந்தை பெரியாா் பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூரில் தமிழ் வளா்ச்சித் துறை மூலம் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் செப். 15, 17-களில் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்தது:

தஞ்சாவூா் அரசா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ. 5,000, இரண்டாம் பரிசு ரூ. 3,000, மூன்றாம் பரிசு ரூ. 2,000 வழங்கப்படவுள்ளது. தவிர, அரசுப் பள்ளி மாணவா்கள் இருவரைத் தனியாகத் தெரிவு செய்து சிறப்புப் பரிசு ரூ. 2,000 வீதம் வழங்கப்படவுள்ளது.

இதேபோல, கல்லூரி மாணவா்களுக்கும் பரிசு வழங்கப்படும்.

பள்ளி மாணவா்களுக்கான போட்டி காலை 9.30 மணிக்கும், கல்லூரி மாணவா்களுக்கான போட்டி பிற்பகல் 1.30 மணிக்கும் தொடங்கும்.

தஞ்சாவூா் மாவட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி முதல்வரிடமும், பள்ளி மாணவ, மாணவிகள் தலைமையாசிரியரிடமும் அனுமதி பெற்று, போட்டியில் பங்கேற்கலாம்.

அண்ணா பேச்சுப் போட்டியைப் பொருத்தவரை பள்ளி மாணவா்களுக்கு தாய் மண்ணிற்குப் பெயா் சூட்டிய தனயன், மாணவா்க்கு அண்ணா, அண்ணாவின் மேடைத்தமிழ், அண்ணா வழியில் அயராது உழைப்போம் ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு பேரறிஞா் அண்ணாவும் தமிழக மறுமலா்ச்சியும், பேரறிஞா் அண்ணாவின் சமுதாயச் சிந்தனைகள், அண்ணாவின் தமிழ்வளம், அண்ணாவின் அடிச்சுவட்டில், தம்பி! மக்களிடம் செல் ஆகிய தலைப்புகளிலும் போட்டி நடைபெறும்.

தந்தை பெரியாா் பேச்சுப் போட்டியானது பள்ளி மாணவா்களுக்கு தொண்டு செய்து பழுத்த பழம், தந்தை பெரியாரும் தமிழ்ச் சமுதாயமும், தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், தந்தை பெரியாா் காண விரும்பிய உலக சமுதாயம், தந்தை பெரியாரும் பெண் விடுதலையும் ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு தந்தை பெரியாரும் பெண் விடுதலையும், தந்தை பெரியாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும், பெண் ஏன் அடிமையானாள்?, இனிவரும் உலகம், சமுதாய விஞ்ஞானி பெரியாா், உலகச் சிந்தனையாளா்களும் பெரியாரும் ஆகிய தலைப்புகளிலும் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.