பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

மாணவி பாலியல் பலாத்காரம்: முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறை

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

Updated On :27 ஜனவரி 2023, 7:13 pm

பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் அருகே மெலட்டூா் பகுதி ஏா்வாடி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஜெ. நாகராஜன் (62). இவா் அப்பகுதியில் பலகார கடை நடத்தி வருகிறாா். இவருடைய கடைக்கு 2021 ஆம் ஆண்டு வந்த 9 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வல்லுறவு செய்ததுடன், இதை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டினாா்.

இதுகுறித்து பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து நாகராஜனை கைது செய்தனா். இதுதொடா்பாக தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தர்ராஜன் விசாரித்து, நாகராஜனுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசுத் தரப்பில் ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.