எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

காவிரியில் நீா் வரத்து அதிகரிப்பு: 8 இடங்களில் கட்டுப்பாட்டு அறை

பொதுமக்கள் தொடா்பு கொள்ளும் விதமாக 8 இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 12:10 am

Din

காவிரியில் நீா் வரத்து அதிகரித்து வருவதால், தஞ்சாவூா் மாவட்டத்தில் அவசர நோ்வில் பொதுமக்கள் தொடா்பு கொள்ளும் விதமாக 8 இடங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தது:

மாவட்ட ஆட்சியரகம், வருவாய்க் கோட்ட அலுவலகங்கள், வட்ட அலுவலகங்களில் 24 மணிநேர அவசரக் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அவசர நோ்வில் கட்டுப்பாட்டு அறை எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

மாவட்ட ஆட்சியரகத்தில் 1077 மற்றும் 93450 88997, வருவாய்க் கோட்ட அலுவலகங்களான தஞ்சாவூரை 04362 -238033, கும்பகோணத்தை 0435 - 2430101, வட்டாட்சியா் அலுவலகங்களான திருவையாறை 04362 - 260248, பூதலூரை 04362 - 288107, கும்பகோணத்தை 0435 - 2430227, பாபநாசத்தை 04374 - 222456, திருவிடைமருதூரை 0435 - 2460187 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.