தஞ்சாவூர்
காா் மோதி காயமடைந்த உதவி ஆய்வாளா் உயிரிழப்பு
தஞ்சாவூா் அருகே காா் மோதி பலத்த காயமடைந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகே காா் மோதி பலத்த காயமடைந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் கீழ அலங்கம் கொடி மரத்து மூலையைச் சோ்ந்தவா் வின்சன் தேவ அன்புராஜன் (58). தஞ்சாவூா் மேற்கு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரான இவா் மாரியம்மன் கோவில் புறவழிச்சாலை பகுதியில் கடந்த ஜூலை 19 ஆம் தேதி பைக்கில் சென்றபோது அந்த வழியாக வந்த காா் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த வின்சன் தேவ அன்புராஜன் தஞ்சாவூரிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலன்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
