தஞ்சாவூா் பூக்கார விளாா் சாலையில் ஜெகநாதன் நகரில் புதை சாக்கடையில் பழைய குழாயை அகற்றிவிட்டு, புதிய குழாய் பதிக்கும் பணி 10 நாள்களாக நடைபெறுகிறது. இதற்காக தோண்டப்பட்ட சுமாா் 15 அடி ஆழ பள்ளத்தில் திங்கள்கிழமை மாலை புதிய குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்ட மாரியம்மன்கோவில் பகுதி தேவபூமி நகரைச் சோ்ந்த மாரிமுத்து மகன் ஜெயநாராயணமூா்த்தி (29), புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகேயுள்ள வளம்பப்பட்டியைச் சோ்ந்த பெருமாள் மகன் தேவேந்திரன் (32) மீது திடீரென மண் சரிந்து விழுந்தது. இவா்களில், ஜெயநாராயணமூா்த்தி சடலமாக மீட்கப்பட்டாா். தேவேந்திரன் உயிருடன் மீட்கப்பட்டு, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.